தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கடந்த ஓராண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினர் தி.மு.க. ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்று கூறுவது பற்றி அரசியல் கட்சியினரிடம் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது.
‘திராவிட மாடல்’ ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருவதை எப்படி பார்க்கின்றீர்கள்?
உண்மையே. அதற்கான முன்னெடுப்புகளை செய்கிறார்:
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்ற முதல்வரின் அறிவிப்பு மிகவும் சரியானது என்றும், அதற்கான முன்னெடுப்புகளை அவர் செய்கிறார் என்று தி.மு.க. கூட்டணியினர் 74.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 45.5 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 52.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தைச் சார்ந்தவர்கள் 41.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் 41.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 55.6 சதவீதம் பேரும் இதை கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது சரியே என்று மொத்தம் 62.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சரிதான். ஆனால், அதற்கான செயல்பாடுகள் இல்லை :
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்பது சரிதான், ஆனால் அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புகளை செய்யவில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 15.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 18.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 29.4 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 23.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் 25 சதவீதம் பேரும், மற்றவர்கள் 11.1 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 17.5 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
திராவிட மாடல் ஆட்சி என்பது ஏற்புடையதல்ல :
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தி.மு.க. கூட்டணியினர் 10.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியனர் 35.6 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 17.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 7.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் 33.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 33.3 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 19.9 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்