10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பல போராட்டங்களோடு அவமானங்களை சந்தித்து வருகிறோம் - பாமக தலைவர் அன்புமணி

10.5 சதவீத இடஒதுக்கீடுக்காக பல போராட்டங்களோடு அவமானங்களை சந்தித்து வருகிறோம் - பாமக தலைவர் அன்புமணி

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்கம் நிர்வாகிகளின் கூட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜிகே.மணி, வன்னியர் சங்க தலைவர் புதா.அருள்மொழி உள்ளிட்டோர் தலைவர் கலந்துக்கொண்டனர்.

Continues below advertisement

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பல போராட்டங்களோடு அவமானங்களை சந்தித்து வருகிறோம். அரசிடம் கெஞ்சி வருகிறோம் திண்டிவனத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு:

கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ்:

தமிழ்நாட்டின் முன்னேற்றமே நம் நோக்கம். அதிகாரம் கிடைத்தால் வேகமாக முன்னேற்றலாம். அதிகாரம் இல்லாமல் போராடி, போராடி முன்னேற்றுகிறோம். கடந்த 44 ஆண்டுகள் போராட்டம், கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. கொஞ்ச நாள் அறைகுறையாக இருந்தது ஆனால் இப்போது இல்லை. அதிகாரம் நம்மிடத்தில் இருந்தால் இந்த சமூக நீதிப்பிரச்சனையை தீர்த்துவிடலாம். இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைத்தும் இன்னும் தீர்க்கவில்லை. 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு பல போராட்டம் நடத்தி வருகிறோம். இட ஒதுக்கீட்டுக்காக பல அவமானங்களை சந்தித்து வருகிறோம். கெஞ்சுகிறோம். தமிழ்நாட்டில் என்ன சமூக நீதி இருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை. இதற்கு அதிகாரம் வேண்டும். மற்ற கட்சியினர் பூத் கமிட்டி அமைத்து பயிற்சி அளித்து வருகிறார்கள் ஆனால் நம்மிடம் பட்டியல்க்கூட இல்லை. பத்து மாதத்தில் தேர்தல் வரப்போகிறது என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என கட்சியினரை கடிந்துக்கொண்டார்.

நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு :-

பாமக நடத்தும் சங்கம், கட்சியை போல் உலகத்தில் எங்கும் கிடையாது. இதுபோல் யாரும் திட்டமிட்டு செய்ததில்லை. கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தி இருந்தால் நாம் தான் முதன்மை கட்சி. ஆனால் யாரும் செயல்படுத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு இடங்களில் குறைந்த வாக்கு சதவீதத்தில் வாய்ப்பு இழந்தார்கள், இதற்கு காரணம் நீங்கள் விலை போனது தான் காரணம் எனவும் பாமகவில் உள்ளது போல் அணிகலன்கள் அமைப்புக்கள் உருவாகிகூட ஒன்று வளர்ச்சியில்லை, அனைத்து ஊரிலும் கொடி பறக்க வேண்டும் என கூறினேன் அனால் யாரும் அதை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. மேலும் காலில் விழுவது எனக்கு பிடிக்காது, யாரு காலிலும் விழ கூடாது. கண்டவன் காலில் எல்லாம்  விழுகிறீர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிறந்த நாள் வாழ்த்து கூறும்போது 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வாங்கி கூடுங்கள் என குழந்தைகள் என்னிடம் கேட்கிறார்கள் என உருக்கமாக பேசினார்.

இந்தியாவில் இருந்து வெளி போக வேண்டும் என்றாள் கடவு சீட்டு, குடும்பத்திற்கு குடும்ப அட்டை வேண்டும் அதுபோல தான் கட்சியின் உறுப்பினர் அட்டை உயிர்நாடி போன்றது. பாமக என்பது குட்டை குட்டை போன்று தேங்கி நிற்பது அல்ல, ஆறு போன்றது ஓடிக்கொண்டே இருக்கும், நான் வைத்து இருக்கும் குறிப்புகள் பிரசாந்த் கிஷோரிடம் கிடைத்தால் உலகம் முழுவதும் எடுத்து சென்றுவிடுவான் எனவும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் 10.5 சதவீதம் வழங்குவதற்கு தாமதமானால் என் உயிரையும் விடுவேன், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என உருக்கமாக பேசினார்.

 

Continues below advertisement