தமிழ்நாட்டின் பல இடங்களில் இரவு வெப்பநிலை இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியக்கும் குறைவாக உள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் தற்போது ஊட்டியாகவே மாறியுள்ளன. இந்த நிலையில் பகல் நேரங்களிலும் வெப்பநிலை தொடர்ந்து 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே நீடிக்கும் என்றும் அடுத்த சில நாட்களுக்கு இதே வானிலைதான் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களும் குறைவான வெப்பநிலையால் குளிரில் நடுங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.






நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வானிலை தகலின்படி, 


20.12.2021 முதல் 24.12.2021 வரை: கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாக காணப்படும்.




வெப்பநிலை எச்சரிக்கை


21.12.2021: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.


கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். சென்னையை பொறுத்தவரைஅடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் ஓரளவு காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தென் மாநிலங்களில் லேசான குளிர் என்றால், வட மாநிலங்கள் குளிரால் உறைந்து வருகின்றன. இது குறித்து  கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வுமையம், குளிர் அலை வீசுவதால் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுத்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண