அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமின் கிடைத்து ஒருவழியாக வெளியே வந்துள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக, அவர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் பதிவு  செய்த வழக்கின் அடிப்படையில், அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்ததும்; அவர்களுக்கு தண்ணி காட்டி 20 நாட்களாக தலைமறைவாக ராஜேந்திரபாலாஜி இருந்ததும், அனைவரும் அறிந்ததே. ஒருவழியாக அவரை மடக்கி கர்நாடகாவில் கைது செய்த போலீசார், திருச்சி சிறையில் அடைத்தவரை அனைத்து அப்டேட்டும் அனைவருக்கும் தெரியும்.




இது ராஜேந்திரபாலாஜியின் இன்றைய நிலை, அதே ராஜேந்திரபாலாஜி கடந்த ஆட்சியில், அமைச்சராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா? ‛நிறையா பேசுவாரு... நல்லா வசைபாடுவாரு... பாஜகவை புகழ்வாரு....’ என்று தானே நீங்கள் கூறுவீர்கள். அதுவும் உண்மை தான், ஆனால் அதை கடந்து அவர் தொகுதியில் கெத்து காட்டிக் கொண்டிருந்தார். மஞ்சள் சட்டையோடு, தொண்டர் புடைசூழ தொகுதிக்குள் செல்லும் ராஜேந்திரபாலாஜிக்கு வரவேற்பே வேறு விதமாக இருக்கும். அது தொகுதியாக இருந்தாலும் சரி, அதை கடந்து தொண்டர்கள் நிகழ்ச்சியானாலும் சரி, அவரை வரவேற்கும் விதமே கொண்டாட்டமாக இருக்கும். 




சாலையில் வைக்கும் சரவெடி ஒன்று போதும், அவர் வருகையை உறுதி செய்ய. இத்தனை நீளத்திற்கு சரவெடி இருக்குமா என்பது கூட அப்போது தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு ஒரே தடாலடி தான். குறைந்தது 3 நிமிடமாவது சாலையில் தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகள், அது வெடித்து முடியும் வரை சாலையில் காத்திருந்து பின்னர் நகரும் அமைச்சரின் வாகனம், வாகனத்தில் இருந்து இறங்கும் முன் அனல் பறக்கும் விசில் சத்தம் என அந்த ஏரியாவை ஜெகஜோதியாக இருக்கும். 


இதில் ஹைலைட் என்னவென்றால், அவர் அணிந்திருக்கும் மஞ்சள் சட்டையை, அவருடன் வருபவர்கள் மட்டுமல்லாமல், அவரை வரவேற்பவர்களும், தொண்டர்களும், பார்வையாளர்களும் என அனைவரும் அணிந்திருப்பார்கள். அப்படி வந்து இறங்குவாரு மனுசன். முன்னாடி எஸ்கார்ட், நின்னாடி பாடிகார்டு(தொண்டர்கள்) என கெத்து காட்டு வலம் வந்த விருதுநகரில் தான், இன்று ஜாமினில் செல்ல வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். விஜய் டயலாக்படி சொன்னால் ‛வாழ்க்கை ஒரு வட்டம்...’ என்பது போல், இதை கடந்து செல்வார் எங்கள் அமைச்சர்(முன்னாள் என்றாலும், இன்றும் அப்படி தான் அழைக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்) என்கின்றனர, அவரது தொண்டர்கள். 


இதோ அந்த வீடியோ...



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண