தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




இந்த நிலையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்களுக்கு ரூபாய் 200 அபராதமாக வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுளளது. இனிமேல், பொது இடங்ளில் முகக்கவசன் அணியாமல் சுற்றுபவர்களுக்கான அபராதம் ரூபாய் 200ல் இருந்து ரூபாய் 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத உயர்வு எச்சரிக்கையால் பொதுமக்கள் இன்னும் கூடுதலாக விழிப்பணர்வுடன் இருப்பார்கள் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான அரசாணை நேற்று தமிழக அரசிதழில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் வெளியானது.  


தமிழ்நாட்டில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்து பதிவாகிக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழல் காரணமாக, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்ககு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.




நாளை முதல் வரும் 18-ந் தேதி வரையிலான நாள் வரை அதாவது தைப்பூசம் வரை தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கனவே தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி வரும் 16-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இது மட்டுமின்றி இந்த மாத இறுதிவரை தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.


இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைக்கும் பணிகளிலும் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இரவு நேரங்களிலும், ஊரடங்கு நேரங்களிலும் தமிழ்நாட்டில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் முதல் அமலில் உள்ள ஊரடங்குகளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க : CM Stalin Inspection : வாத்தி ரெய்டு...! வாத்தி ரெய்டு..! சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்‌ஷன்ஸ்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண