தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை,  அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன்படுத்தாத மீனவர்கள் என இருதரப்பு மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டு படகுகளுக்கு தீவைப்பு சம்பவகள் என பல நடந்தேறியது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது.




இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.  இத்தீர்ப்பை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கம்பாடியில்  சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய கோறுவது தொடர்பாக 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை பொதுக்கூட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ..!




இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11  மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது குறித்து மீனவ பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர்.


Erode East Election: மாற்றம் கண்ட தேசிய கூட்டணி.. பாஜகவை ஓரம் கட்டும் ஈபிஎஸ்.. களம் காண தயாரான ஓபிஎஸ்




பின்னர், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டைமடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ள விசைப்படகு ஆகிய மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கம் சூழ்நிலை ஏற்ப்பட்டால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்று ஏகமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால்  சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Mayiladuthurai: உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும் - விவசாயிகள்