கரூரில் தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல் பங்கிற்கு வராமல் இருப்பதற்காக தீயணைப்பு துறையினர் செடிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்தினர்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். 


 




தீ மளமளவென பற்றி ஆற்றுப் படுகையில் உள்ள முட்புதற்கள் பற்றி எரிந்தது. இதனால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் இருந்த செடிகள், ஏற்கனவே பயன்படுத்திய டீசல் டேங் உள்ளிட்ட இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.


காவிரி ஆறு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் குடிநீர் வழங்கவில்லை எனக் கூறிய காலி குடங்களுடன் பெண்கள்  சாலை மறியல் போராட்டம்.


 




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மகாதானபுரம் ஊராட்சி  4வது வார்டு குடித்தெரு பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி மேட்டுமகாதானபுரம் பகுதியில் பெண்கள், ஆண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுனர்.


ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா  இந்தப் பகுதியில் நின்று வெற்றி பெற்ற பிறகு  ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவில்லை, பொதுமக்களின் கோரிக்கையை கேட்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


 




 


ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். காவிரி ஆறு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே குடி தண்ணீர் கிடைக்கிவில்லை போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சாலை மறியல் போராட்டத்தால் கிராமப்புறங்களில் இருந்து கரூர், குளித்தலை செல்லக்கூடிய அரசு பேருந்துகள், மறியலில் சிக்கி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.