தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கை:
2023-24 நிதியாண்டிற்கான காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கை தயாரானது எப்படி?
வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்க முடியாத மக்கள் உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தங்களது கருத்தை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், கடிதம் மூலமும், 9363440360 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும், tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் விவசாயிகளின் கருத்துகள் பெறப்பட்டன. அந்த கருத்துகளின் அடிப்படையில் வேளாண்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.அர். கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
அப்ப்போது பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் நிலத்தடி நிரின் அளவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் எண்ணற்ற சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். வறட்சி, வெள்ளப்பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மண்ணின் தன்மைக்கேற்ற் பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நடவடிக்கை:
இதையடுத்து தெலுகு வருடபிறப்பு என்பதால் நாளை சட்டப்பேரவை விடுமுறை செயல்படாது. தொடர்ந்து, 23ம் தேதியன்று சட்டப்பேரவை மீண்டும் கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் கொண்டு வரப்படும். பின்பு, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 28ம் தேதி பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்க உள்ளார்.