சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த 4 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.  உள்ளே எத்தனை நோயாளிகள் இருக்கின்றனர் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 






தீ விபத்து நடந்த கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு அதிக அளவில் புகை மூட்டம் செல்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதிக புகை உள்ளதால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 


தீயை அணைக்க போராடும் வீரர்கள்!






முதலில் கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது என சொல்லப்பட்டிருந்த நிலையில், இப்போது ஆக்சிஜன் சிலிண்டர் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் மின் கசிவா அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் கசிவா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே இருந்த 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தீயணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண