தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தினம் முன்னிட்டு நாளை (பிப்ரவரி, 5) தமிழ்நாடு முழுவதும், உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் அதாவது பார்கள், அதேபோல், நட்சத்திர அந்தஸ்து உடைய ஹோட்டலில் அமைக்கப்பட்டு உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை மூடிவைக்கவும் விற்பனையை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். மதுக்கூடம் நடத்தும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tasmac Leave: 'குடிமகன்களே..' தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் விடுமுறை - காரணம் என்ன?
த. மோகன்ராஜ் மணிவேலன் | 04 Feb 2023 09:58 AM (IST)
தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தினம் முன்னிட்டு நாளை (பிப்ரவரி, 5) தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபானக் கடை