எம்ஜிஆரின் பக்கத்துணை.. கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

எம்ஜிஆருக்கு பக்கத்துணையாய் விளங்கிய புலமைப்பித்தன் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதைப் பெற்றுள்ளார்.

Continues below advertisement

கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். "அதிமுக முன்னாள் அவைத்தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுக்கொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கியவர். எம்ஜிஆருக்கு பக்கத்துணையாய் விளங்கிய புலமைப்பித்தன் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதைப் பெற்றுள்ளார். அவரின் மறைவு அறிந்து வருத்தமுற்றேன். புலமைப்பித்தனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுக தோழர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

Continues below advertisement

இதேபோல், கவிஞர் வைரமுத்துவும் புலமைபித்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்க் கலைஉலகில் புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன் திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர். அவருடைய பலபாடல்கள் மேற்கோள் காட்டத்தக்கவை. தமிழ் தமிழர் என்ற இரண்டு அக்கறைகள் கொண்டவர். அவர் மறைவு துயரம் தருகிறது. குடும்பத்தார்க்கும் தமிழன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டராக, அன்புக்கு பாத்திரமாக விளங்கிய புலமைப்பித்தன் அதிமுகவின் அவைத் தலைவராக, தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக பதவி வகித்தவர்.


குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக’நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், தாய் யார், மகன் யார், தெரியார்’ என்ற தனது முதல் பாடலை எழுதி கவனம் பெற்றவர். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் அவர் எழுதிய ‘ புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை’ என்ற பாடல் பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது.

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86. சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் புலமைப்பித்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

இதனிடையே, கவிஞர் புலமைப்பித்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யக்கோரி அவரது பேரன் திலீபன் புகழேந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Breaking News LIVE : சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்

 

Continues below advertisement