Breaking News LIVE : சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் பினாமி சட்டத்தின்கீழ் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பங்களாவை முடக்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வரும் 15ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் ஆலோசனை நடந்து வருகிறது. தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானமாக முன்மொழிந்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்தார்.
Background
தமிழ்நாடு அரசின் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம் தேதி துவங்கிய மானியக் கோரிக்கை மீதான விவாதம், வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு, அமைச்சர்கள் பதில் உரை ஆகிய அலுவல்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை இரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -