மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் வி.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார்.



இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,



“ மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார்.


இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு” நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரை முதல்வர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.





இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். “இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வு ரத்து என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பானது கொரோனா கட்டுப்பாடு குறித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதுக்கு பிறகு தமிழ்நாடு மக்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முதலமைச்சர் சந்திப்பு நீட் தேர்வு விலக்கு குறித்தா ? அல்லது கொரோன கட்டுப்பாடு குறித்தா? என்ற கேள்வி எழுகிறது. 


ஏனெனில், திமுக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். நீட் தேர்வு குறித்து தொடர்ந்து பொதுமக்கள் கேள்வியெழுப்பியபோது, விரைவில் அதற்கான முடிவை திமுக அரசு எடுக்கும் என்று விளக்கமளித்தது. 




நீட் தேர்வு விலக்கு குறித்த சந்திப்பு என திமுக அரசு தகவல் வெளியிட்ட நிலையில் அதை மறுக்கும் விதமாகவே ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதிலிருந்து ஆளுநர் தன்னுடைய நிலைப்பாட்டை மறைமுகமாக தெரிவித்திருப்பதாகவே தெரிகிறது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண