திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி தனியார் பள்ளிகள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு , வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் மிதிவண்டி அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 



 


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக குறைந்தது


மேடையில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மழை வெள்ளப் பாதிப்பு என்றவுடன் கோட்டையில் இருந்து கொண்டே ஆர்டர் போடும் முதல்வர் நமது முதல்வர் கிடையாது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதற்கு தீர்வுகளை காணும் முதல் வரை நாம் பெற்றுள்ளோம். அந்த வகையில்  நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் அயராது  உழைத்தார். அதை அவரது அருகில் இருந்து நாங்கள் பார்த்து உள்ளோம். தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் வரும் என்று பேசினார்.