Sivakasi Accident: மீண்டுமா..! சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Sivakasi Accident: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sivakasi Accident: சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலை விபத்து - 2 பேர் பலி:
விபத்தில் காயமடைந்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளையார் குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாரியப்பன் மற்றும் முருகன் எனும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Just In




தொடரும் விபத்துகள்:
விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி,சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான, தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், அங்கு வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதுதொடர்பாக எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தான், கடந்த மாதம் 29ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே, காளையார் குறிச்சியில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.