கத்திகுத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள உதார் ரவுடி உதயா உள்ளிட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் 


 


காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதி


காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அசைவ  உணவகத்தை விக்னேஷ் என்பவர் நடத்தி வருகின்றார். இதில் பல்வேறு அசைவ உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிக முக்கிய பகுதிகளான காமாட்சி அம்மன் கோவில் ,ஜெயின் கோவில் , காய்கறி மார்க்கெட், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதியின் மையத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் உணவகம் தயாரிகாகும் செய்யும் இடத்தை சுத்தம் செய்துவிட்டு , ஓட்டலில் பணிபுரியும் வட மாநில இளைஞர் மைஃப்புஜா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.




ரவுடி உதயா


அப்போது அந்த வழியே போதையில் வந்து கொண்டிருந்த பூக்கடை சத்திரம் பகுதி சேர்ந்த ரவுடி உதயா மற்றும் உதயா நண்பர்கள் அண்ணாமலை, சதீஷ் ஆகியோர், இந்தக்கடை வழியே வரும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை தள்ளிவிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு தள்ளிவிட்ட தரையை துடைக்க பயனிபடுத்தும் மாப்பு மைஃப்புஜால் மீது பட்டிருக்கிறது. அதனால் அந்த மேற்குவங்க இளைஞர் இவர்களிடம் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என கேள்வி கேட்டதால், போதையில் இருந்த உதயா உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அவை தாக்கியுள்ளனர்.



 


மேல் சிகிச்சை


மேலும், உணவிலிருந்த காய்கறிகள் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, மைஃப்புஜாவை முதுகு, இடுப்பு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மைபோஜாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக  காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு கல்லூரி கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.




 


இதுக்குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகளான உதயா, அண்ணாமலை சதீஷ் ஆகிய மூவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையெடுத்து போலீசார்  குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் ராயன்குட்டைபள்ளத்தெரு அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையெடுத்து, போலீசார் அங்கு சென்ற நிலையில் தப்பியோடிய மூவரையும் பிடித்து கைது செய்திருக்கின்றனர்.


 


கால் முறிவு


இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி உதயாவிற்கு கால் முறிவும், அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சதிஷ்-க்கு வீட்டில் தவறி விழுந்து கடந்த இரண்டு மாதங்களாக கை முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.




இது குறித்து போலீசார் கூறுகையில் ,  போலீசாரை கண்டதும் மூவரும் கட்டிடத்தில் மீதி இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற நிலையில், உதயாவிற்கு கால் முறிவும், அண்ணாமலைக்கு கை முறிவும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சதீஷ் இருக்கு கை முழு ஏற்பட்டு காயங்களுடன் இருந்து வரும் நிலையில் அவருக்கு இதில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர்.