நாளை எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. ஜெய்பீம் படம் பிரச்சனையில், சூர்யாவின் படத்திற்கு வன்னியர் சங்கங்களும், பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கடலூரில் திட்டமிட்டபடி எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அது தொடர்பாக கடலூர் சூர்யா ரசிகர் மட்டும பொருளாளர் சதீஷிடம் ஏபிபி நாடு சார்பில் பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அந்த பேட்டி...





கேள்வி: கடலூரில் தியேட்டர்கள் புக்கிங் எவ்வாறு உள்ளது?


பதில்: கடலூரில் இதுவரை 2 தியேட்டர் தான் உறுதியாகியிரக்கிறது. 4 தியேட்டர் என்று முதலில் கூறினார்கள். ஆனால், எதுவும் உறுதியாகவில்லை. இது கடலூர் நகரின் நிலை. கடலூர் புறநகரில் ஓரிரு தியேட்டர்கள் உறுதியாகியுள்ளது. பெரும்பாலான தியேட்டர்கள் இன்னும் புக் ஆகாமல் உள்ளது. சன் பிக்சர்ஸ் படம், வழக்கமாக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். ஆனால், இந்த படத்திற்கு இன்னும் கடலூரில் இறுதி தியேட்டர்கள் நிலை உறுதியாகாமல் உள்ளது. 


கேள்வி: இந்த நிலைக்கு காரணம் என்ன?


பதில்: பாமக எதிர்ப்பு தான் காரணம். அப்படி தான் நான் நினைக்கிறேன். 


கேள்வி: ரசிகர்கள் சிறப்பு காட்சியில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?


பதில்: கடலூரில் காலை ரசிகர்கள் காட்சி எடுத்துள்ளோம். ஆடம்பரமாக, கொண்டாட்டமாக முதல் காட்சியை செய்யலாமா என்பது குறித்து போலீசாரின் அனுமதியை பெற உள்ளோம். 


கேள்வி: வழக்கமாக கடலூரில் எத்தனை தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி இருக்கும்?


பதில்: வழக்கமாக இரண்டு தியேட்டர்களில் ரசிகர்கள் காட்சிகள் எடுப்போம். இந்த முறை ஒரு தியேட்டர் தான் எடுத்துள்ளோம். இந்த முறை ரசிகர்கள் யாரும் வரவில்லை. பள்ளி, கல்லூரி நேரமாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் தியேட்டர் ஃபுல் ஆகிவிடும். 


கேள்வி: எதிர்ப்பால் ரசிகர்கள் காட்சி ரத்தாக வாய்ப்பு உள்ளதா?


பதில்: அதற்கு வாய்ப்பில்லை. கிருஷ்ணாவில் கண்டிப்பாக படம் வெளியாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 


இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். 


முன்னதாக கடலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பிரபாத், ஏபிபி நாடு இணையத்திற்கு அளித்த பேட்டியின் வீடியோ இதோ...



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண