2022-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று, `நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற அடிப்படையின் கீழ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை மாநராட்சி சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில், புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மேயர் ப்ரியா ராஜன் தலைமை தாங்கினார்.
அதனை அடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலை இசை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதனை தொடர்ந்து மேயர் ப்ரியா பேசுகையில், நான் ஒரு பெண்ணாக பிறந்தததற்கு பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். நாட்டுக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சரின் முடிவு காட்டி கொடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார். ஆண்களை தாழ்த்தி பேசுவதோ, பெண்களை தூக்கி பேசுவதோ சமத்துவம் கிடையாது. எல்லா தேவைகளையும் பூர்த்து செய்ய முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.
ப்ரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர். இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்