ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை (15.11.2025) மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
எங்கெல்லாம் மின் தடை:
நடுப்பாளையம்:
நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரப்பூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.
கணபதிபாளையம்
ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் மற்றும் குமாரப்பாளையம்
ஈரோடு டவுன்:
ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு.
கொடுமுடி
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
மின் தடை முன்னெச்சரிக்கைகள்
பராமரிப்புக்காக திட்டமிடப்பட்ட மின் தடைக்கு முன்னதாக, சிரமத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படுவதற்கு முன்பு மக்கள் தங்கள் மொபைல் போன்கள், பவர் பேங்குகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் மின்சார பம்புகள் செயல்படாமல் இருக்கும் என்பதால், வீடுகளில் போதுமான குடிநீர் மற்றும் வீட்டு நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மின்சாரம் சீரமைக்கப்படும்போது எந்த சேதத்தையும் தவிர்க்க மின் சாதனங்களை அணைக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்தனர். மெழுகுவர்த்திகள், டார்ச்ச்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான இடங்களில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை குளிர்விப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் அவர்கள் பரிந்துரைத்தனர். சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, மின் தடை நேரத்தின் போது லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வழக்கங்களை முன்கூட்டியே திட்டமிடவும், மின்சாரம் மீண்டும் தொடங்கும் வரை ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.