ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற திருமகன் ஈவெரா திமுகவின் மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டார். இவருக்கு அடுத்த இடத்தில் தாமாகவை சேர்ந்த யுவராஜாவை விட திருமகன் 8904 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இங்கே பெரும்பான்மையில் வெற்றிப்பெற்றது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் யார் யார் வெற்றிபெற்றது? இந்த கட்சி இதுவரை ஆதிக்கம் செலுத்தியது ? என்பதை பார்க்கலாம். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் (2021):

கடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் நோட்டா உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் 1 சதவீதமாவது வாக்குகளை பெற்றன. அதில், நோட்டா அதிகப்படியான வாக்குகளை பெற்று 5 வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இடம்  வேட்பாளர் பெயர் கட்சிகள் வாக்குகள்
வெற்றியாளர் திருமகன் ஈவேரா . காங்கிரஸ் 67,300
இரண்டாம் இடம்  யுவராஜா தமிழ் மாநில காங்கிரஸ் 58,396
மூன்றாம் இடம் கோமதி நாம் தமிழர் கட்சி  11,629
நான்காம் இடம்  ராஜ்குமார் மக்கள் நீதி மய்யம் 10,005
ஐந்தாம் இடம் Nota None Of The Above 1,546
ஆறாவது இடம் முத்துக்குமரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1,204
ஏழாவது இடம் ஆறுமுக ஏசி கண்ணன் ஏபிஓஐ 373
எட்டாவது இடம் கோவிந்தராஜ் பிஎஸ்பி 372
9 மீனாட்சி சுயேட்சை 299
10 ஷாஜஹான் சுயேட்சை 256
11 யுவராஜ் சுயேட்சை 235
12 சண்முக வேல் எம்ஜிஆர் மக்கள் கட்சி 151
13 ராஜா மக்கள் திலகம் முன்னேற்றக் கழகம் 102
14 ஆண்டனி பீட்டர் சுயேட்சை 96
15 மின்னல் முருகேஷ் சுயேட்சை 73

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் கடந்த தேர்தல் வெற்றியாளர்கள்:

கடந்த 2021ம் ஆண்டு திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கடந்த 2016ம் ஆண்டு தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசு, அப்போது 64,879 வாக்குகள் பெற்று சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக சந்திரகுமார் திமுக சார்பில் போட்டியிட்டு 57,085 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 

இதற்கு முன்னதாக, கடந்த 2011 ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார்.வி.சி 69,166 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக திமுக சார்பில் போட்டியிட்ட முத்துசாமி  58,522 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.