MK Stalin Speech: மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை இல்லையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி..!

மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா என தனது பிறந்த நாள் விழா உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா என தனது பிறந்த நாள் விழா உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி திமுக மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்  ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். 

Continues below advertisement