ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், மனுவை திரும்பப் பெறுவதற்கான  நேரம் நிறைவடைந்தது. வரும் 27ம் தேதி நடைபெற உள்ள  இடைதேர்தலில் போட்டியிட 77 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 6 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து,   இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. இறுதிநாளான அன்று மட்டும் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய  வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இடைதேர்தலில் போட்டியிட மொத்தமாக 96 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு, 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், 77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர்.