ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதிதைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் வில்லாயுதம், திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்து, இலங்கைக்குக் கடத்த முற்பட்டதாகக் கடலோர காவல்படையினரால் துறையினரால் வில்லாயுதம் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் சிறையில் இவர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நிலை பாதிப்பு காரணமாக இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளரான வில்லாயுதம் முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் மதுரை அமலாக்கத் துறையினருக்கு ரகசியமாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த தகவலையடுத்து நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை வேர்கோடு பகுதியில் உள்ள வில்லாயுதம் வீட்டிற்கு அமலாக்கத்துறையின் உதவி இயக்குனர் தலைமையில் வந்த 18 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வில்லாயுதத்தின் வீடு, தங்கும் விடுதி, மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
காலையில் இருந்து சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வில்லாயுதத்தின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்களிடமும் அவர்கள் வைத்திருக்கும் வங்கிக்கணக்குகள், வங்கி பரிவர்தனைகள், புதிதாக வாங்கிய சொத்து ஆவணங்கள் குறித்து சோதனை நடந்தது. ஆவணங்கள் குறித்த விவரங்களை வில்லாயுதம் மற்றும் அவரின் குடும்பத்தினரிடமும் அமலாகத்துறை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். இந்த சோதனையின் முடிவில் வில்லாயுதத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்கும் போது, வில்லாயுதத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திய பின்புதான் சொத்துக்களின் மதிப்பை வெளியிடப்படும் எனவும், எங்களுக்கு கிடைத்த தகவலில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம், இன்றோடு ரெய்டு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது எனவும் தெரிவித்தனர். அமலாக்கத்துறை எடுத்து சென்றுள்ள ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விரைவில் அமலாகத்துறை சார்பில் விலாயுத்ததிற்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பபடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏப்பா, யாரைக் கேட்டாலும் அவரும் அவரு மீன் யாவாரம் தான பார்த்தாரு திமுகவில் இருக்காரு, அதுக்காக இவ்வளவு சொத்தா சேர்த்திருப்பாரு அப்படின்னு உள்ளூர் மக்கள் பேசிக்கிறாங்க..!
மாவட்ட மீனவரணி செயலாளராக உள்ள திமுக பிரமுகரின் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பது ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது