உடுமலை அருகே யானைகள் மீது கற்கள் வீசி தாக்கி துன்புறுத்திய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலைப்பகுதியில் குட்டியுடன் இருந்த யானைகள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின அதில் குட்டி உட்பட 3 யானைகள் கொண்ட யானைக் கூட்டத்தின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.




வளர்ப்பு நாய்களுடன் யானைகள் மீது கல் வீசுவது, கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குவது, தூரத்தி வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. குட்டி யானையை பாதுகாக்கும் நோக்கில் அதை விட்டு நகரவும் முடியாமல், இளைஞர்களை விரட்டவும் முடியாமல் யானைகள் பரிதவிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகளை துன்புறுத்தும் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



காட்டை பாதுகாக்கும் பழங்குடிகளே யானைகளை துன்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், யானைகளை துன்புறுத்திய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யானைகளை துன்புறுத்திய செல்வம், காளிமுத்து அருண்குமார் ஆகிய 3 பேர் மீது உடுமலை வனத்துறையினர் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 3 பேரையும் கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானைகளை துன்புறுத்தும் வீடியோவில் அடையாளம் தெரிந்த  3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்தால்தான் யானைகளை துன்புறுத்திய மற்ற நபர்கள் குறித்த விபரம் தெரியவரும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர். இதற்கிடையே திருமூர்த்தி மலைப்பகுதியில் இளைஞர்கள் யானைகள் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி திருமூர்த்தி மலை. இப்பகுதி யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி செட்டில்மெண்ட்  வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் யானைகள் மீது கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் குட்டி உட்பட 3 யானைகள் மீது இளைஞர்கள் கற்கள் வீசி தாக்கிய காட்சிகளும், ஆத்திரமடைந்த யானைகள் இளைஞர்களை தூரத்தி வரும் காட்சிகளும், தூரத்தில் வந்த யானைகளை கூட்டமாக இளைஞர்கள் சேர்ந்து தாக்கி விரட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.



 

இதுகுறித்து வனம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், "திருமூர்த்தி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதிக்குள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் வெறுப்பேற்றியுள்ளனர்.  தூரத்தி வரும் யானைகளை கூட்டமாக சேர்ந்து தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் யானைகளுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் ஏற்படவில்லை. யானைகளை தாக்கிய இளைஞர்கள் மீது வனத்துறை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்த போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்க்க சென்ற திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யானைகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.