விழுப்புரம்: ஆசிரியர்களை கொத்தடிமையாகவும் கல்வி துறையை ஏவல் துறையாகவும் அரசியல் பணிக்காக ஆசிரியர்களை திமுக ஸ்டாலின் அரசு பயன்படுத்துவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார். 

Continues below advertisement

ஆசிரியர்களை கொத்தடிமையாக நடத்துகிறது

விழுப்புரம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 1008 பசுக்களை கொண்டு பூஜை மற்றும் 75 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம்  பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோ பூஜை நடத்தப்படுகிறது மிக சிறப்பாகவும் பிரமாண்டமாக நடத்தப்படுவதாகவும் யாராலும் இதை சாதாரமணமாக செய்ய முடியாது  தமிழக மக்கள் சார்பாக இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க நலமோடு வாழ அதிமுக சார்பிலும் வாழ்த்துவதாகவும், வரி சலுகைகளை மிக பெரிய பரிசாகவும்  தீபாவளி பரிசாகவும் மக்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என சொல்லிக்கொள்ள எந்த தார்மீக உரிமையும் ஸ்டாலினுக்கு இல்லை எனவும், கல்வித்துறை முற்றிலும் சீரழிந்துள்ளது , நான்கரை ஆண்டுகளில் கல்விதுறை மிக மோசமடைந்துள்ளது. எவ்வித  அடிப்படை வசதிகள் கூட இல்லை கல்வியில் சிறந்த மாநிலம் என மத்திய அரசு சொல்ல வேண்டும், இல்லையென்றால் பெற்றோர்கள் மாணவர்கள், பொது மக்கள் சொல்ல வேண்டும், ஆனால் ஸ்டாலின் தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துக்கொள்வதாக சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

Continues below advertisement

பள்ளிக்கல்விதுறையில் அதிமுக ஆட்சியில் 37 ஆயிரத்து 636 பள்ளிகள் இருந்தன, ஆனால் இந்த ஆட்சியில் 37 ஆயிரத்து 554 பள்ளிகள் தான் உள்ளதாகவும் , 89 பள்ளி குறைந்துள்ளதாகவும், 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் 53 லட்சமாக இருந்தமாணவர்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 52 ஆயிரத்து 75 ஆயிரம் மாணவர்களாக குறைந்துள்ளதாகவும், அதற்கு பள்ளிகளில் போதிய கட்டிடம் இல்லை, இருக்கைகள் கூட இல்லை என்றார்.

இதனால் மாணவர்கள் தனியார் பள்ளியை நாடும் நிலை உள்ளதாகவும், கல்வி உரிமை சட்டம் கீழ் அரசு 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டனர் , சிறந்த மாநிலம் என சொல்லிக்கொள்ளும் திமுக ஆட்சியில் நிறுத்தியுள்ளதாகவும் கேட்டால் மத்திய அரசு பணம் தரவில்லை என நொண்டி சாக்கு காரணம் சொல்வதாக குற்றம் சாட்டினார்.

ஏழை எளிய பிற்படுத்தபட்ட மாணவர்கள் மீது நல்ல நோக்கம் இருந்திருந்தால் மாநில அரசு நிதியில் கொடுத்திருக்கலாம், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தும் அரசுக்கு ஏன் மனம் இல்லை எனவும், அப்பா விற்கு பேனா வைக்கும் ஸ்டாலினுக்கு மாணவர்களுக்கு செய்ய ஏன் மனமில்லை என கூறினார்.  

கல்வி சட்டத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது  அதிமுக  அரசு என்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், 45 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்தது அதிமுக அரசு ஆனால் திமுக அரசு இதுவரை 2ஆயிரத்து 400 ஆசிரியர்களை தான் நியமித்துள்ளதாக என்றார்.

திமுக ஆட்சியில் கற்றல் திறன் குறைந்துள்ளதாகவும் ஆசிரியர்களுக்கு கற்றலை தவிர வேறு வேலைகளை திமுக அரசு கொடுப்பதாகவும் 47 மாதிரி பள்ளிக்கூடங்களில்  உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் நலன் சட்டத்தை இந்த அரசு மீறுவதாகவும், ஆசிரியர்களை கொத்தடிமையாகவும்  கல்வி துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

துணை வேந்தரை நியமிக்க துப்புல்லாத முதல்வர் தன்னக்கு தானே பாராட்டிக் கொள்வதாகவும், கெளரவ , பகுதி நேர ஆசிரியர்களுக்கு துரோகம் செய்யும் அரசாக திமுக உள்ளதாகவும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து இதுவரை நடவடிக்கையும் இல்லை, அரசு ஊழியர்கள் போட்ட பிச்சையில் தான் ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என சுட்டிக்காட்டினார். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என முதல்வர்க்கு தெரியவில்லை  கல்விதுறை ஆசிரியர் கத்தியால் வெட்டபடுகிறார் , மாணவர்களிடையே சாதி மோதல்கள் தலைவிரித்தாடுவதாகவும் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை , கல்வித்துறை தூங்கி கொண்டிருப்பதாகவும், அந்த துறை அமைச்சர் உதயநிதிக்கு சேகவம் செய்வதாக விமர்சித்தார்