நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் தமிழ்நாடு 10%
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தகவல். நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFOல் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் நோக்கி விஜய் பயணம்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், மூன்றாவது வாரமாக இன்று நாமக்கல், கரூரில் மக்களைச் சந்திக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். தவெகவுக்கு போலீசார் 20 நிபந்தனைகள் விதிப்பு. சாலையோர கடைகளை அடைக்க உத்தரவு.
டிஎன்பிஎஸ்சியில் கூடுதல் பணியிடங்கள்
குரூப்-4 தேர்வில் 727 கூடுதல் பணியிடங்களை சேர்த்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 13 லட்சம் பேர் எழுதிய தேர்விலிருந்து மொத்தம் 4,662 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று, கலந்தாய்வுக்கு முன்பு கூடுதல் காலியிடங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதற்கும் ஆட்கள் தேர்வு செய்யபப்டும் - டிஎன்பிஎஸ்சி
தியா சூர்யாவின் ஆஸ்கர் முயற்சி!
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா ஜோதிகா தயாரிப்பில், பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு Leading Light என்ற ஆவண குறும்படத்தை இயக்கியுள்ளார் அவர்களின் மகள் தியா சூர்யா. ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் முயற்சியாக (Oscar Qualifying Run-க்காக) கலிபோர்னியாவின் Regency Theatre-ல் செப். 26 முதல் அக். 2 வரை இப்படம் திரையிடப்படுகிறது
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எலின் 4 ஜி சேவையை இன்று ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!. இதன் மூல்ம 97,500 புதிய BSNL 4G கோபுரங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதி
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. மகளிர் சுய தொழில் தொடங்க வழங்கப்படும் இந்த நிதியை திருப்பி செலுத்தத் தேவையில்லை என பேச்சு
“சைக்கோ” - ஜெகனை சாடிய பாலையா
ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என சாடியதால் அதிர்ச்சி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு
பதவி விலகுவேன் - உக்ரைன் அதிபர்
“ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வேன். தேர்தல் எனது இலக்கு அல்ல. கடினமான நேரத்தில் என் நாட்டிற்காக நான் துணை நிற்க வேண்டும் என விரும்பினேன். போர் முடிய வேண்டும் என்பதே என் இலக்கு. அதன் பிறகு அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அந்த பதவிக்காக போட்டியிட மாட்டேன்!” - ஜெலன்ஸ்கி, இவரது பதவிகாலம் 2024 பிப்ரவரியுடன் முடிவடைந்தது.
13 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டம்
உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளத. அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டணங்களால் அதிக செலவுகள் ட ஏற்படுவதை ஈடுகட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் சர்மா அபாரம்
சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து 3 முறை அரைசதம் விளாசிய 6வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அபிஷேக் ஷர்மா. விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார், ரோஹித், ஸ்ரேயஸ் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்