கூகுள் உருவான கதை 

Continues below advertisement

Google - என்பது அமெரிக்காவை தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறி தொழில்நுட்பம் , Cloud , இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் Search Engine இதன் முதன்மையான சேவை ஆகும். 1998 - ல் லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப் பங்கு வெளியீடு 2004 - இல் நடைபெற்றது. 2006 - இல் இந்நிறுவனம், 1600, ஆம்பிதியேட்டர் பார்க்வே மவுண்டன் வியூ , கலிபோர்னியா என்ற முகவரிக்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.

உலகம் முழுதும் , ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் , ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் , இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

மனிதர்களா அல்லது தொழில்நுட்பமா ? 

இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில் , நாம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தேடும் போது , எதைக் கேட்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அதற்கான பதில்களை அளிக்கிறது. அதன் பின்னால் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா அல்லது தொழில்நுட்பமா என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு எப்போதும் இருப்பதுண்டு.

முட்டாள் என்ற சர்ச்சை

உலகின் முக்கிய நபரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விஷயத்தில் இது படித்த அறிவாளிகளுக்கே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் டிரம்பின் படம் வரும் சர்ச்சை தான் அதற்கு காரணம். சில ஆண்டுகளுக்கு முன் , கூகுள் தவறான தகவல்களை வழங்குவதாகவும் , தன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் , இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க பார்லி மென்டின் நீதித்துறைக்கான குழு விளக்கம் கேட்டிருந்தது.

அதன்படி ஆஜரான சுந்தர் பிச்சை அளித்துள்ள விளக்கத்தில் ;

இணையத்தில் தேடப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் மனிதர்களால் பதில் அளிக்கப்படுவதில்லை. கூகுள் தளம், மக்கள் இணையத்தில் சேர்க்கும் , ஆயிரக்கணக்கான கீவேர்டு எனப்படும் தேடும் வார்த்தைகளை புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்திருக்கும். பிறகு தேடப்படும் வார்த்தையுடன் தொடர்புடையவற்றை , ஏற்கனவே சேகரித்து வைத்திருப்பதிலிருந்து வழங்கும்.

3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடல்கள்

இது மக்கள் இணையத்தில் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே வெளிப்படுத்தும். கூகுள் சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளது. அவற்றையெல்லாம் எந்த மனிதராலும் தேடி முடிவுகளை வழங்க முடியாது என இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.