இன்று அதிகாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் இந்த நடுக்கம் 3.6 புள்ளிகள் பதிவானது.
நிலநடுக்க தேசிய மையம்(NCS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " வேலூர் மாவட்டத்தில் இருந்து மேற்கு - தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டது" என்று தெரிவித்தது.
அதே போன்று, கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் ரிக்டர் அளவில் 4.6 நிலநடுக்கமும் பெரு நாட்டின் மேற்குப்பகுதியில் ரிக்டர் அளவில் 7.2 அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்திய தர நிர்ணயத்தின் படி, நாட்டின் 3, 4,5 ஆகிய மண்டலங்களில் சுமாரானது முதல் மிக அதிக அழிவுகளை நிலநடுக்கத்தால் ஏற்படுத்தக் கூடிய பகுதியாகும்.
இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்கத்துக்கு வெவ்வேறு அளவிலான தீவிரத்துடன் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை மாநகரப் பகுதி, நில நடுக்கம் மண்டலம் - 3ன் கீழ் வருகிறது. மொத்த சென்னை பெருநகரப் பகுதியும் இம்மண்டலத்தின் கீழ் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோடைக்கானல் ஆகிய மூன்று பகுதிகளில் தேசிய நிலநடுக்க ஆய்வகங்களின் நெட்வொர்க் அமைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், மேலும் 3 நிலஅதிர்வு ஆய்வகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்