மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. லாகின் செய்தால் இன்று காலை 6 மணியில் இருந்து 10 மணிக்குள் பதிவு செய்யவும் என வருகிறது, மேலும் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதுமானது. காரணத்தை தெரிவித்து விட்டு செல்லலாம். ஆனால் கொரோனா பாதிப்பு உயர்ந்ததாலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படாததாலும் உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டன.
அதன்படி, பயணம் மேற்கொள்ள விரும்புவோர் , தேவைப்படுவோர் இ-பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இ பதிவு முறையில் மொத்தமே நான்கு விஷயங்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடிவதாலும் சிலவற்றுக்கு என்ன ஆவணத்தை தருவது என்ற குழப்பம் இருப்பதாலும் விளக்கம் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Read : இ பதிவு செய்வது எப்படி? முழுமையான விளக்கம்
குறிப்பாக,
• திருமணம்
• இறப்பு
• முதியோர் பராமரித்தல்
• மருத்துவ அவசரம்
இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே இ பதிவு முறையில் நாம் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் பலரும் விண்ணப்பம் செய்ய இ பதிவு இணையமான https://eregister.tnega.org/#/user/pass முகவரியில் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இணைய தள முகவரியை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது. நாளை பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் காலை 6 மணிக்கு சரியாகும் என்ற அறிவிப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்