மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தமிழக அரசு இ பதிவு முறையை கொண்டு வந்துள்ளது.  இன்று முதல் பதிவு செய்து பயணம் செய்யும் முறையானது அமலுக்கு வருகிறது. எந்தெந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளலாம், பதிவு செய்யும் முறை என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.


படி : 1


இ பதிவு செய்யும் முன்  எந்த காரணத்துக்காக செல்கிறோம் என்பதையும் அதற்கு தேவையான ஆவணங்களையும் வைத்துக் கொள்ளுதல் நல்லது.



  • மொபைல் எண்

  • அடையாள அட்டை – ஆதார், பான், ட்ரைவிங் லைசென்ஸ்

  • திருமண அழைப்பிதழ், இறப்பு சான்று, மருத்துவ படிவம், தன்னார்வலர் கடிதம்

  • வாகன எண்

  • செல்ல வேண்டிய இடத்தின் முகவரி




படி 2 :


உங்களது கணினி அல்லது மொபைலில் கீழ்காணும் வலைத்தளத்துக்கு செல்லுங்கள்



கையில் இருக்கும் மொபைல் எண்ணை பதிவு செய்து, கீழே இருக்கும் உறுதிப்படுத்தும் எண்ணையும் பதிவு செய்து OTP கேட்கும் இடத்தை கிளிக் செய்யவும்.


OTP உங்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதனை அதற்கான இடத்தில் பதிவு செய்யவும்.





 


படி 3 :


இப்போது நமது பயணம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மொத்தம் 4 விஷயங்களுக்கு மட்டுமே நீங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும்



  • திருமணம்

  • இறப்பு

  • முதியோர் பராமரித்தல்

  • மருத்துவ அவசரம்


இவற்றில் ஏதேனும் ஒன்ரை தேர்வு செய்த பின்னர் , எங்கிருந்து எங்கே, பெயர் , அடையாள எண், காரணத்துக்கான சான்று போன்றவற்றை பதிவு செய்யவும்.




படி 4 :


இது உங்களது தற்போதைய முகவரி மற்றும் எங்கு செல்ல வேண்டுமோ அங்குள்ள முகவரிக்கான படிவம்.


உங்கள் அடையாள அட்டையில் இருக்கும் அல்லது தற்போதைய முகவரியை பதிவு செய்யவும்.


செல்லும் இடம் குறித்த முகவரியையும் பதிவு செய்யவும்,




படி 5 :


விண்ணப்பிக்கும் நபரோடு எத்தனை பேர் பயணிக்கிறோம் என்பது பற்றிய விபரங்களை பதிவு செய்யவும்.


கார் என்றால் அதன் விபரங்களை பதிவு செய்யவும்.


பிறகு சமர்பித்தால் பதிவு செய்ததற்கான சான்று கிடைக்கும். ஒருவேளை சான்றினை தொலைத்தால் மீண்டும் மொபைல் நம்பரை பயன்படுத்தி லாகின் செய்து டவுன்லோட் செய்யலாம்.




தற்போது அரசு கொடுத்துள்ள இணைப்பில் மொத்தம் 4 காரணங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற அவசரத்துக்கு இறப்பு சான்றிதழை பெற்று உடனடியாக அப்லோட் செய்து பதிவு செய்து செல்லுதல் என்பது இயலாத காரியம். அதே போல் திடீர் மருத்துவ அவசரத்துக்கு எது போன்ற ஆவணத்தை அப்லோட் செய்வது என்ற குழப்பமும் உள்ளது.