தொடர் மழை காரணமாக நாளை(03.12.25) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

சென்னை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், இலங்கையை புரட்டிப் போட்டுவிட்டு, தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. ஆனால், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர்  சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Continues below advertisement

திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் திருவள்ளூரும் அடங்கும்.

வானிலை ஆய்வு மையத்தால், நாளை திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படவில்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, நாளை(03.12.25) அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.