நேற்று (26.12.2022) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27.12.2022) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக,


27.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


28.12.2022 முதல் 30.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


31.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   


ஊத்து (திருநெல்வேலி) 9, மாஞ்சோலை (திருநெல்வேலி) 7, காக்காச்சி (திருநெல்வேலி), சேர்வலர் அணை (திருநெல்வேலி) தலா 6, பாபநாசம் (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 5, ராமநதி அணை (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), திருப்பூர் தலா 4, கடனா அணை (தென்காசி), தென்காசி, திருப்புவனம் (சிவகங்கை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), ஆய்க்குடி (தென்காசி), தூத்துக்குடி, செங்கோட்டை (தென்காசி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) தலா 3, அவினாசி (திருப்பூர்), கள்ளந்திரி (மதுரை), ஆயின்குடி (புதுக்கோட்டை), புலிப்பட்டி (மதுரை), கஞ்சனூர் (விழுப்புரம்), உசிலம்பட்டி (மதுரை), கன்னியாகுமரி, மதுரை விமான நிலையம், குப்பணம்பட்டி (மதுரை), திருமங்கலம் (மதுரை), வானூர் (விழுப்புரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஆண்டிபட்டி (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), திருப்பத்தூர் (சிவகங்கை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), வம்பன் Agro (புதுக்கோட்டை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


27.12.2022: கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும். 


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.