புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.


ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி


அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பட வேண்டும் என செவிலியர்கள் கேட்டு கொண்டதாகவும் விரைவில் தேர்வு செய்ய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், அரசு மருத்துவமனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது என குறிப்பிட்டார். எம்.ஆர்.ஐ, பெட் ஸ்கேன் கருவிகளை புதுச்சேரி காரைக்கால் மருத்துவமனைகளில் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, விரைவில் அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்படும் என கூறினார்.






 


மேலும், “நீட் எவ்வளவு தேவை என்பது என்னை போல் மருத்துவர்களுக்கு தான் தெரியும், நீட் மேல் அவநம்பிக்கை ஏற்படுத்த வேண்டாம், மாணவர்களுக்கு எதிராக பேசுவதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். காங்கிரஸ் எம்.பி சிதம்பரத்தின் மனைவி தான் போராடி நீட் தேர்வை கொண்டு வந்தார்கள், எனவே  கேள்வி நாங்க தான் கேட்க வேண்டும். நான் தெலுங்கானா செல்லவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் தெலுங்கானாவில் மழை வெள்ளத்தில் அம்மாநில முதலமைச்சர் கூட  மக்களை சந்திக்கவில்லை. ஆனால் நான் போய் சந்தித்தேன்,  கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழில் அனுப்பிய தீர்மானத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மத்திய அரசு அனுப்ப அறிவுறுத்திய நிலையில் அவர்கள் அதனை அனுப்பவில்லை, மேலும் மாநில அந்தஸ்து குறித்து பேச காங்கிரஸ் திமுகவிற்கு தகுதியில்லை” என ஆளுநர் கட்டமாக  கூறினார்.