தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் புதியதாக 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 32 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  இன்று வீடு திருப்பியோர் எண்ணிக்கை 728 ஆகும். இன்று மட்டும் தமிழ்நாட்டில் 11 நபர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். 

கோவையில் அதிகபட்சமாக 177 நபர்கள் புதியதாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 122 நபர்கள் புதியதாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக  ஈரோட்டில் 58 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 56 நபர்களுக்கும், திருப்பூரில் 50 நபர்களுக்கும் இன்று தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக இன்று எந்த கொரோனா பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

கொரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தற்போதுதான் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவி வருவது குறிப்பிடத்தக்கது.  இதன் காரணமாக இந்தியாவில் விமான நிலையங்களிலும், முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!