காட்டேரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் பயணித்த நிலையில், படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பிபின் ராவத்தும், அவரது மனைவியும் துர்திஷ்டவசமாக உயிரிழந்தனர்.
மேலும், அதில் பயணித்த முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் விபத்து குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மரத்துக்கும் சற்று உயரத்தில் தான் ஹெலிகாப்டர் பறந்தது. போய் திரும்பியதும் மரத்தில் மோதியது. பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக இங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள் என்றார்.
முன்னதாக, குன்னூர் காட்டேரி என்ற இடத்தில் விபத்து நடந்த நிலையில் விபத்தை அறிந்த அக்கிராம மக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நெருப்பை அணைக்க முயற்சி செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் அருகில் தண்ணீர் எதுவும் கிடைக்காத நிலையில் பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு நீர் பிடித்து நெருப்பை அணைத்துள்ளனர் அக்கிராம மக்கள். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்ற நிலை எதுவும் தெரியாத நிலையில் கிடைத்த தண்ணீரை வைத்தே அவர்களை மீட்டுள்ளனர். இதற்கிடையே கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தை முதலில் நேரில் பார்த்த கிருஷ்ணசாமி என்பவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், என் பெயர் கிருஷ்ணசாமி. ஹெலிகாப்டரில் பெரும் சத்தம் வந்தது. சத்தம் வந்த பிறகு மரத்தில் பெரிய அளவில் நெருப்பு எரிந்தது.
அதன் பிறகு பெரிய மரத்தில் மோதி கீழே விழுந்தது.கீழே விழுந்த பிறகு கரும்புகை எழுந்தது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்