1971ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வரும் மதுரை தற்போது 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மதுரை முத்து 1980ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். இறுதியாக கட்ந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மூலம்  அதிமுகவை சேர்ந்த வி.வி.ராஜன் செல்லப்பா மேயரானார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரை மாநகராட்சியில் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது. 




 


நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தி.மு.க 67 வார்டுகளிலும், தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 வார்டுகளிலும், விசிக ஒரு வார்டுகளிலும், சி.பி.எம் 4 வார்டுகளிலும், ம.தி.மு.க 3 வார்டுகளிலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  எதிர்க்கட்சியான அ.தி.மு.க 15 வார்டுகளிலும், பா.ஜ.க ஒரு வார்டிலும்,  சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் இந்திராணி பொன்.வசந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயர் பொறுப்பு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் 80ஆவது வார்டில் வெற்றி பெற்ற டி.நாகராஜ் துணை மேயருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


 



மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் துணை மேயர் வேட்பாளர் டி.நாகராஜ்


மதுரை மேயர் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பதில் மதுரை மாவட்ட அமைச்சர்களாக வலம் வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோரிடையே கடும்போட்டி நிலவி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர்களாக விளங்கும் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட 60ஆவது வார்டு கவுன்சிலர் பாமா முருகன் மற்றும் 57 ஆவது வார்டு கவுன்சிலர் இந்திராணி பொன்.வசந்த் ஆகியோர் மேயர் லிஸ்டில் இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இந்திராணி பொன்.வசந்த் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான பொன்.வசந்த் வழக்கறிஞராகவும், விவசாயியாகவும்  இருந்து வருகிறார். 1993ஆம் ஆண்டில் இருந்து திமுகவில் பணியாற்றி வரும் இவர், தற்போது ஆரப்பாளையம் பகுதி கிளைச் செயலாளராக உள்ளார். மதுரை மேயர் பொறுப்பு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தனது மனைவி இந்திராணிக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மூலம் சீட்டை வாங்கி வெற்றியும் பெற்றுள்ளார்.




மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு ஆதரவாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முயற்சி செய்த அதே வேளையில் மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக அரசு என்பவரும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 68ஆவது வார்டில் போட்டியிட்ட இந்திராணிக்கு எதிராக மொத்தம் 12 வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் 6 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்று வெற்றியை தட்டிச்சென்றார் இந்திராணி பொன்.வசந்த், இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Corporation election 2022 | மதுரை மேயர் பதவியில் அமைச்சருக்கு வலைபோடும் சாதி அரசியல்.. தப்புவாரா பி.டி.ஆர் !