சென்னை மேயராக ஒரு பெண்ணை களம் இறக்க திமுக தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். இந்த முறையை 2006ம் ஆண்டு திமுக அரசு மாற்றியது. அதன்படி கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படும் முறை கொண்டு வந்தது. ஆனால் 2011 அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது அதிமுகவின் ஜெயலலிதா அரசு அந்த விதியை மாற்றியது. அதாவது மீண்டும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டு மீண்டும் ஒரு மாற்றத்தை ஜெயலலிதாவே கொண்டு வந்தார். அதன்படி, கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. ஆனாலும் முந்தையை எடப்பாடி அரசு, மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் தற்போது தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த வருட இறுதிக்குள் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் தேர்தலையும் முடித்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. இந்நிலையில் ஆளும் திமுக அரசு தன்னுடைய முழுக் கவனத்தையும் மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. ஏற்கெனவே திமுக அரசு ஆர்வம் காட்டும் அதேமுறையில் தான் இந்தமுறை மேயர் மற்றும் நகராட்சி தலைவர்கள் தேர்வானது நடக்குமென தெரிகிறது.
சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை
அதாவது கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் முறை. அதனால் தீவிரமாக ஆட்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளதாம் திமுக. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பெண்ணை மேயராக நியமிக்க தீவிரமாக திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் திமுக தலைமை. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, திமுக மூத்த நிர்வாகி கொடுத்த தகவலின்படி இந்த முறை சென்னை மேயர் ஒரு பெண்ணாகவே இருக்குமென்றும், அதற்கான தேடலில் தற்போது திமுக தீவிரமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் பெண்களுக்கு இடத்தை ஒதுக்கி மேலும் தங்களது கொள்கைக்கான இருப்பை அழுந்தச் செய்ய திமுக விரும்புவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் மிக விரைவில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்தியாவில் 95% பேருக்கு பெட்ரோல் தேவை இல்லை" - உ.பி. அமைச்சர் புது உருட்டு!