தமிழக முதலமைச்சர் மற்றும் தி.மு.கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 69வது பிறந்தநாளான இன்று கொண்டாடுகிறார். அவருக்கு காலை முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 


இந்நிலையில் சென்னை சிஐடி காலனி இல்லத்தில், மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதையை செய்து, அங்கிருந்த ராஜாத்தி அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் முதல்வர் மற்றும் தனது அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திமுக பொதுச்செயலாளர் மற்றும்  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர்.


 






முன்னதாக கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுக சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “பெரியார்- அண்ணா - கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி - அண்ணன் 
ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செய்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண