கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மழை வெள்ள பாதிப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக எம்,பி கனிமொழி, “தூத்துக்குடியில் மீட்பு பணிகள் ஏரத்தாழ முடிந்துள்ளது. தண்ணீர் குறைந்துள்ள காரணமாக மக்கள் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 100 இடங்களில் சாலைகள், மேம்பாலங்கள் சேதமைடைந்துள்ளது இதனால் பல இடங்களுக்கு செல்ல முடியவில்லை. நெடுஞ்சாகை துறைகள் விரைந்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 80 % மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கால்நடைகள், சேதாரங்கள் குறித்து கணக்கீடு எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்குள் இந்த பணிகள் முடிவடையும், அதன் பின் நிவாரணம் அறிவிக்கப்படும்.


மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல சாவல்களுக்கு பின் ஏரல் பகுதிக்கு செல்ல முடிந்தது. தற்போது தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் வரை நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.  


இன்று காலை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “ 40 மணி நேரத்தில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டரில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பரப்பளவு) 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 டி.எம்.சி தண்ணீர் அதாவது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 50% அதிகமாகும். பாபநாசம் மணிமுத்தாறு அணையில் 10 மடங்கு அதிக தண்ணீர். இந்த தண்ணீர் கடலுக்கு சென்றாக வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.200 கோடி மதிப்பில் இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக மோட்டர் பம்புகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். 


விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!


Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி