அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி செயல்பட்டவர் தங்கமணி. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்தவரும், அவரின் இடது கரமாக பார்க்கப்பட்டவருமான தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது.
முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பான விசாரணையில் தங்கமணி 4.68 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அதில், '' ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார்.
சாலையோர தள்ளு வண்டியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு - அடையாளம் தெரியாமல் தவிக்கும் போலீஸ்
எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மாண்புமிகு தளபதி அவர்களின் அரசு நிறைவேற்றி வருகிறது. கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை.
கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து நாமக்கல்லில் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், “அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிமுகவை அழிக்கலாம் என நினைக்கிறார்கள். அது முடியாது. எனது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் வழு சேர்க்க கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் உள் நோக்கத்திற்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் உள்ளார். அவர் திமுகவில் உள்ளதால் என்னை பழி வாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். 1000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாதுதிமுக தலைவருக்கு செந்தில் பாலாஜி சுயரூபம் தெரியவில்லை. போக போக தெரிந்து கொள்வார்” என்று கூறினார்.