திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் காமராசர், கலைஞர் கருணாநிதி, போன்ற அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பு கொண்டவர். இவர் அரசியலில் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளராக பல்வேறு நூல்களை எழுதியவர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசியல் கட்சிகளில் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர். பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்துகொண்டு சிறைக்கு சென்றவர். 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். 


 


கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருக்க விரும்பாததால் அவர் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். அதிக வாக்குகளை பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இன்னும் ஒரு சில நாட்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள நிலையில் அவருக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உட்பட பல தலைவர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 




 


இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  அவரது டிவிட்டர் பதிவில் “மன்மோகன் சிங் 2.0ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.


மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே தலையை மார்ப் செய்தது போல் புகைப்படமும் இணைத்திருந்தார். இந்த பதிவால்  காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி திமுக தொண்டர்களும் கடும் அதிர்ப்த்தி அடைந்துள்ளனர்.  பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய இந்த பதிவை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார். இது மட்டுமின்றி பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து அவர் முன்வைத்து வருவது வழக்கம். புதிதாக யாரேனும் பொறுப்பேற்றால் கூட அவர் வாழ்த்து கூறி விமர்சித்து பேசுவது வழக்கம். தொண்டர்கள் பலரும் இது போன்ற செயலால் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.  பல்வேறு விமர்சனங்கள் அவர் முன்வைப்பதால் இன்று திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


'ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்!Tamil Nadu Assembly : தி.மு.க. ஆட்சியில் 78 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு