3 மாவட்டங்கள்:

Continues below advertisement

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. 

சென்னை: - 2 நாட்களுக்கு வானிலை நிலவரம்:

Continues below advertisement

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Also Read: Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமரானது எப்படி? சோனியா காந்தியிடம் ராகுல் சொன்னது என்ன ?

தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கு மழை நிலவரம்:

28:12-2024 மற்றும் 29 -12 -2024:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30-12-2024 ல் 31-12-2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01:01:2025:

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read; New Year Rain: புத்தாண்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன? 02-01-2025.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.