தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான படங்கள், வசனங்கள் உள்ளிட்டவற்றை இங்கு காணலாம். 


தீபாவளி:


தீபாவளி என்றே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுதான். தீபாவளி நாள் நெருங்கி வரும் நிலையில் “ அந்த கொண்டாட்ட நாளை சிறப்பிக்கும் வகையில், மக்கள் தயாராகி வருவதை பார்க்க முடிகிறது. புத்தாடைகள் வாங்குவது, இனிப்புகள் வாங்குவது, பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்குவதில், மக்கள் கடைகளுக்கு படையெடுத்துள்ளதால், கடைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவைகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.


அலைமோதும் கூட்டம்:


மேலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காக வந்திருப்பவர்களும், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை அண்டை வீட்டார்களுடனும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வது வழக்கம்.
 அதே தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். தற்போது, தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் வளர்ச்சியடைந்துள்ள தருணத்தில், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி இணையம் இருந்தால் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்கள் வழியாக வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. 



உங்களுக்காக சில வாழ்த்துகள்: இதை உங்களது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள். 



  • இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்..

  • தீபாவளி நாளின் ஒளியை போல உங்களது வாழ்வும் நிறைந்திருக்கட்டும்.

  • தீபாவளி நாளில் உங்களது கனவுகள், ஆசைகள் நிறைவேறட்டும்.

  • தீபாவளி நாளில் அறியாமை விலகி நன்னாளாக அமையட்டும்.

  • தீபாவளி இனிப்புகளை போலவே வாழ்வும் இனிக்கட்டும். 

  • இந்த நாளில் தொடங்கும் எல்லாமும் நல்லதாய் அமையட்டும்.

  • பாதுகாப்பான தீபாவளி அமைய வாழ்த்துகள்.

  • இருள் விலகி ஒளி பரவட்டும்; இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  • குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்..வாழ்த்துகள்..அன்பான தீபாவளி வாழ்த்துகள்.