விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி திமுக தலைவரை மாற்றவேண்டுமென திமுக பேரூராட்சி உறுப்பினர்கள் சுயேட்சை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்திலிருந்து  வெளிநடப்பு செய்து செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளியில் செல்லாமல் இருக்க கூட்ட அரங்க வாயில் பூட்டு போட்டு பூட்டபட்டன.


பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி நம்பிக்கை இல்லா தீர்மானம்


விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் பேரூராட்சி தலைவராக  அஞ்சுகம் கணேசன்  ( திமுக ) என்பவர் இருந்து வருகிறார். பேரூராட்சி உறுப்பினர்களுக்கு திட்டங்கள் செயல்படுத்த அஞ்சுகம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, என்பதால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர் விசிக கவுன்சிலர் 1 என 11  போர் அஞ்சுகத்தை மாற்ற வேண்டுமென கடந்த கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் 11 உறுப்பினர்களும் கூட்டத்திற்கு சென்றனர்.


அப்போது பேரூராட்சி  நிர்வாகத்தினர் கூட்ட அரங்கிற்குள் இருந்து உறுப்பினர்கள் வெளியே செல்லாதவாறும் உள்ளே யாரும் வராமல் இருக்க வாயில் கதவினை பூட்டு போட்டு விட்டு கூட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தை வெளிநடப்பு செய்தபின் வெளியே வந்த உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவராக உள்ள அஞ்சுகத்தை மாற்றவேண்டுமென கையொப்பமிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முரளியிடம் மனு அளித்தனர்.


சாதி பேரை வைத்து கீழ் தனமாக பேசும் பேரூராட்சி தலைவி அஞ்சுகம் கணவர்


அதன்பின் பேட்டியளித்த உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவி அஞ்சுகம் கணவர் கனேசனின் தலையீடு அதிகமாக உள்ளதாகவும், பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரினால் மிரட்டுவதாகவும், சாதி பிரச்சனையை  தூண்டி விடுவதாக குற்றச்சாட்டினார். சாதி பேரை வைத்து கீழ் தனமாக பேசுவதால் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி 15 உறுப்பினர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.