தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரூர் முக்கிய வீதிகளில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கரூர் மாநகர் பகுதியில் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர் முக்கிய வீதியான ஜவகர் பஜார், மனோகரா கார்னர், கரூர் நகர பேருந்து நிலையம், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை,ஊர்க்காவலர் படையினர் உள்ளிட்ட 1000 காவலர்கள் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய இடங்களில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், 50 தற்காலிக கேமரா, பறக்கும்(ட்ரோன்) கேமரா 2 என பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஜவஹர் பஜார் பகுதியில் பாதுகாப்பு மையத்தை தற்காலிகமாக ஏற்படுத்தி சிசிடிவி மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.