தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிரசம் செய்யும் பணி மும்மூரமாக நடைபெற்று வருகிறது.


 




கரூர் - கோவை சாலையில் கடந்த 13 ஆண்டுகளாக பாரம்பரிய அதிரசம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக இங்கு பெரிய அளவில் அதிரசம் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. தரமான பச்சரிசி, நயம் வெல்லம், சுக்கு போன்றவற்றை பயன்படுத்தி வீட்டு முறைப்படி சுகாதாரமான முறையில் அதிரசம் தயாரிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


 


 




தீபாவளி பண்டிகைக்கு தான் பெரிய அளவில்  தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பல வீடுகளில் அதிரசம் செய்ய மக்கள் சிரமப்படுவதால் எங்களது தயாரிப்பு அதிரசம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வழக்கத்தை விட அதிக அளவில் அதிரசம், மிச்சர், கை முறுக்கு, சீடை உருண்டை, தட்டடை போன்ற அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.