2024 Holiday Calendar: 2024ல் இத்தனை திங்கள் கிழமை லீவு: நீங்க இந்த நாட்கள் லீவு எடுத்தா போதும்...ஹாலிடே ஜாலிடேதான்...!

2024 Holiday Calendar Tamil Nadu: 2024ஆம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Continues below advertisement

2024 Holiday Calendar Tamil Nadu: 2024ஆம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Continues below advertisement

லீவு லீவு...

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் 2024ஆம் ஆண்டு தொடங்க உள்ளளது.  இந்நிலையில்,  2024ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து, 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 24 நாட்களில், 6 நாட்கள் திங்கள் கிழமைகளில் வருகிறது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருகிறது. 6 நாட்கள் திங்கள் கிழமைகளில்  வரும் நிலையில்,  பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

6 திங்கட்கிழமைகளில் விடுமுறை:

  • ஜனவரி மாதத்தில், 1ஆம் தேதி திங்கட்கிழமை, ஆங்கில புத்தாண்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஜனவரி மாதத்தில், 15ஆம் தேதி திங்கட்கிழமை, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  •  ஏப்ரல் மாதத்தில், 1ஆம் தேதி திங்கட்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு தினம் (வணிக/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • ஜூன் மாதத்தில், 17ஆம் தேதி திங்கட்கிழமை, பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஆகஸ்ட் மாதத்தில், 26ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • செப்டம்பர் மாதத்தில், 16ஆம் தேதி திங்கட்கிழமை, மிலாதுன் நபி பண்டிகைக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 


2024ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதமும் நவம்பர் மாதமும் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை. 

எந்தெந்த கிழமைகளில் எத்தனை விடுமுறை?

  • திங்கட்கிழமை - 6 நாட்கள்
  • செவ்வாய் கிழமை - 2 நாட்கள்
  • புதன்கிழமை - 5 நாட்கள்
  • வியாழன்கிழமை - 4 நாட்கள்
  • வெள்ளிக் கிழமை - 3 நாட்கள்
  • சனிக்கிழமை - 2 நாட்கள்
  • ஞாயிற்று கிழமை - 2  நாட்கள்

மேலும் படிக்க

2024 Holiday List: பொங்கலுக்கு 5 நாள் லீவு: வெளியான 2024 விடுமுறை லிஸ்ட்! அப்செட் செய்யும் பிப்ரவரி, நவம்பர் மாதங்கள்!

Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!

Continues below advertisement