உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
காசநோய் கணக்கெடுப்பின்படி 2015 - ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% 2022 - ஆம் ஆண்டு காசநோய் பாதிப்பு சதவிகிதத்தை குறைந்தமைக்காக தேசிய குழுமம் மத்திய காசநோய் பிரிவு பரிந்துரையின்படி கரூர் மாவட்டம் வெள்ளி பதக்கம் பெற்றதையொட்டி காசநோய் பிரிவு பணியாளர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரூர் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தினம் மார்ச் 2024 முன்னிட்டு காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தாந்தோணி அரசு கலைக்கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் சர்க்கரைநோய், எச்ஐவி உள்ளவர்களுக்கு காசநோய் வரும் வாய்ப்பு அதிகம், காசநோய் அனைத்து வயதினரையும் தாக்கும், குறுகிய கால சிகிச்சை எடுப்போம் காசநோயை தடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
காச நோயை 2025 - ஆம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வர நம் நாடு முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். காச நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க பங்களிக்க வேண்டும் ஒன்றுபட்டு செயல்பட்டால் 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழித்து விடலாம் "ஆம் காச நோயை ஒழிக்க நம்மால் முடியும்" "YES WE CAN END TB" என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காசநோய் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு அரங்கமும், காசநோய் இல்லா கரூர் மாவட்டம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணப்பலூன்களை பறக்க விடப்பட்டது. காசநோய் ஒழிப்பு தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகையில் கையொப்பம் இயக்கத்தினை தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பு தொடர்பான செல்பிபாயிண்ட் அமைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒன்றுபட்டு செயல்பட்டால் 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழித்து விடலாம் "ஆம் காசோலையை ஒழிக்க நம்மால் முடியும்" "YES WE CAN END TB" என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொள்ள மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டார்கள். காசநோய் கணக்கெடுப்பின்படி 2015 - ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% 2022 - ஆம் ஆண்டு காசநோய் பாதிப்பு சதவிகிதத்தை குறைந்தமைக்காக தேசிய குழுமம் மத்திய காசநோய் பிரிவு பரிந்துரையின்படி கரூர் மாவட்டம் வெள்ளி பதக்கம் பெற்றதையொட்டி காசநோய் பிரிவு பணியாளர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த காசநோய் பிரிவு பணியாளர்களுக்கு கோப்பையினை வழங்கினார்கள். சுகாதார தன்னார்வர்களுக்கான காசநோய் கையேட்டினை வெளியிட்டார்கள்.
வெள்ளியணை, க.பரமத்தி, ஈசநத்தம், சேங்கல், அய்யர்மலை, காவல்காரன்பட்டி ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி கருவியினை வழங்கினார். இந்திய மருத்துவ சங்க தலைவர் மரு.சண்முகசுந்தரம் அவர்களுக்கு காசநோய் ஒழிப்புக்கு உதவி புரிந்தமைக்காக கேடயம்வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், இணை இயக்குனர் (நலப் பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குநர்கள் மரு.சரவணன்(காசநோய்), மரு.சந்தோஷ்குமார் (சுகாதாரப் பணிகள்), அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு.குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) . சைபுதீன், மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.