தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று தெள்ளத்தெளிவான புள்ளிவிவரங்களுடன், சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரத்தை கீழே வருமாறு:


"தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்)  கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


25.03.2023(நாளை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்)  கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும். 


26.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும். 


27.03.2023 மற்றும் 28.03.2023:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான /  மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


லக்கூர் (கடலூர்) 8, தொழுதூர் (கடலூர்) 6, மணம்பூண்டி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), வெங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கிளச்செருவை (கடலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 4, வேப்பூர் (கடலூர்), செந்துறை (அரியலூர்), வெள்ளக்கோவில் (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), காட்டுமயிலூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),  கள்ளக்குறிச்சி) தலா 3, திருத்தணி PTO (திருவள்ளூர்), தழுதலை (பெரம்பலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), எறையூர் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை, புவனகிரி (கடலூர்)), சேட்பேட்டை (திருவண்ணாமலை)), ஜெயம்கொண்டம் (அரியலூர்), விருதுநகர், ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), திருவள்ளூர், காட்டுமன்னார்கோயில் (கடலூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), திருமங்கலம் (மதுரை), செம்மேடு (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 2, சிதம்பரம் AWS (கடலூர்), தருமபுரி, எறையூர் (பெரம்பலூர்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மூலனூர் (திருப்பூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கொடுமுடி (ஈரோடு), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), காட்பாடி (வேலூர்), சோத்துப்பாறை (தேனி), முகையூர்    (விழுப்புரம் ), தல்லாகுளம் (மதுரை), வடகுத்து (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), கங்கவல்லி (சேலம்), வீரகனூர் (சேலம்), மதுரை தெற்கு (மதுரை), ஏற்காடு (சேலம்), செஞ்சி (விழுப்புரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.