தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இமைகள் அறக்கட்டளை செயல்படுத்தும் கொடையூர் நீர்வழிப் பகுதி மேம்பாட்டு திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்  துவக்கி வைத்தார்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கொடையூர் ஊராட்சியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி(நபார்டு) நிதியுதவியுடன் இமைகள் அறக்கட்டளை செயல்படுத்தும் கொடையூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.




 



மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டின்) நிதிஉதவியுடன் கரூர்  மாவட்டத்தில் அரவக்குறிச்சி  வட்டாரத்தில் கொடையூர் மற்றும் பாகநத்தம்  கிராமத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் I &II  இமைகள் அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. கொடையூர்  நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் I  & II -ன் , முன்மாதிரி செயலாக்க நிலை, சுமார் 28 லட்சம் மதிப்பீட்டில், 500 ஏக்கர் பரப்பளவில், செயல்படுத்தப்பட உள்ளது. இமைகள் அறக்கட்டளை மற்றும் கொடையூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் I  & II  இணைந்து இந்த திட்டம் மூலம், பண்ணை குட்டை அமைத்தல், மண் வரப்பு அமைத்தல், கல் வரப்பு அமைத்தல், மரக்கன்று வளர்த்தல், பழ மரங்கள் வளர்த்தல், அடர் வனக்காடு அமைத்தல், நீர் உறிஞ்சும் குழிகள் அமைத்தல், தீவனப்பயிர் வளர்த்தல், ரீசார்ஜ் குழி அமைத்தல், அசோலா வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் போன்றவை விவசாயிகளுக்கு, செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 84% நபார்டின் நிதியுதவியுடனும், 16 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.


நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கொடையூர் ஊராட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும் இது. கொடையூர் மக்கள் என்பது பேரிலேயே கொடை என்று உள்ள மக்கள். நீரின்றி அமையாது உலகு நீரின்றி அமையாது உலகு அந்த வள்ளுவன் சொல்லுக்கு ஏற்ப அந்த முக்கியமான விஷயத்தை தண்ணீர் இல்லாத காலமாக, மழை இல்லாத காலமாக, வானம் பார்த்த பூமியாக இருந்த நிலையில் பஞ்சம் பிழைப்பதற்காக வெளியில் செல்வது காலங்களை மாறி இப்பொழுது நம் கவலை இன்றி வாழும் அளவிற்கு இப்பொழுது நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.  நமது ஊரில் அறிவியல் பூர்வமாக நீர் வளத்தையும், மண் வளத்தையும் அதிகப்படுத்தலாம் நம் ஊர் பகுதிகள் மேடு பகுதியாக இருக்கும் வகையில் நிர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் நீர்வழிப் பகுதியாக மாற்ற நபார்டு மூலமாக உங்கள் கிராமத்தினை முன்னோடி கிராமமாக தேர்ந்தெடுத்து இந்த முன்னோடி திட்டத்தினை செயல்படுத்த  உள்ளது. இது நபார்டு மூலமாக சாலைகள், பள்ளிக்கூட கட்டடங்கள், வேளாண் போன்ற திட்டங்களுக்கு பல்வேறு நிதிகளை ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.


 




 


குறிப்பாக இந்தியாவில் பாலைவனப் பகுதியான ராஜஸ்தானில் நீர் மேலாண்மையை சிறப்பாக செய்த காரணத்தினால் சில பயிர் வகைகள் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே வேளாண் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது அதேபோல் அறிவியல் பூர்வமாக நீர் மேலாண்மை மேற்கொண்டால் நமது விளை நிலங்களையும் சிறப்பாக பதிவு செய்வதற்கு தயார் செய்ய முடியும். தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என்பது மிகப் பெரிய அமைப்பாகும். இந்த அமைப்பு மூலம் பல கோடி ரூபாய்க்கான திட்டங்களை கொண்டு வர முடியும். இது போன்ற கிராம பகுதியை தேர்ந்தெடுத்து இந்த அமைப்பு மூலமாக இந்த திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்ட உள்ளது. நீர்வடிப்பகுதி மேம்பாடு திட்டத்தை கொடையூர் மக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் சிறப்பான திட்டமான கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட வருகிறது. கொடையூர் ஊராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட்டவர்கள். மேலும் கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மானியங்களில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள் வளர்ப்பதற்கு வங்கி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பண்ணை குட்டைகள் அமைப்பது நீர் உறிஞ்சு குழிகள் அமைப்பது போன்ற பணிகள் மூலம் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்ட வருகிறது. கொடையூர் பகுதி வறண்ட பகுதியை செழிப்பான பகுதியாக மாற்றுவதற்கு நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நீர்வடி பகுதி மேலாண்மை திட்டத்தில் செயல்படுத்த முன்வர வேண்டும்‌. எந்த ஒரு திட்டத்தையும் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது எனவே இப்பகுதி செழிப்பான பகுதியாக மாறுவதற்கு இது ஒரு தொடக்க புள்ளியாக அமைய வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன் எனத் தெரிவித்தார்கள்.


முன்னதாக சிறப்பான கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.


திருச்சி மற்றும் கரூர் மாவட்ட நபார்டுவங்கி மேலாளர்மோகன் கார்த்திக், இணை இயக்குநர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், கே.விகே. வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழகம் முனைவர்.திராவியம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிகண்டன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) ரவிபாரதி, வேளாண் செயற் பொறியாளர் சுப்பிரமணியம், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.சரவணக்குமார், இமைகள் அறக்கட்டளை தலைவர் பிரபு, செயலாளர் பூங்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா மற்றும் ஊர் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்